×

அவள குழந்தையாக இருக்க விடமாட்டீங்களா..? நெட்டிசன்கள் கேள்வியால் கடுப்பான அர்ச்சனா!

கேரள புடவையில் மகளை கலாய்த்த நெட்டிசனுக்கு அர்ச்சனா பதிலடி

 

பெண் தொகுப்பாளினிகள் அரிதாக இருந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. 90ஸ்'களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார்.

அந்த வகையில் சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர். அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்கு மகள் சாரா கேரளா புடவையில் போட்டோ எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் அவளை குழந்தையாகவே இருக்க விடமாட்டீங்களா? என்றதற்கு அவள் ஒன்றும் குழந்தை இல்லை என கூறி நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News