×

சீனாவின் தவறால் பாதிக்கப்படும் உலக நாடுகள்... மிக்பெரிய நஷ்டத்தை சந்திக்கும்... டிரம்ப் எச்சரிக்கை!

சீனாவின் தவறால் இன்று 184 நாடுகள் கொரோனா தொற்றால் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன என்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

சீனாவின் தவறால் இன்று 184 நாடுகள் கொரோனாவின் பிடியில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன. அவர்களுடனான வர்த்தகத்தை நிறுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவினால்தான் இன்று உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. சீனாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்துக் கொள்ளுமாறு அமெரிக்க எம்.பி.க்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று உலகை கண்ணுக்குத் தெரியாத எதிரி ஒன்று ஆட்டுவித்து வருகிறது. இதுகுறித்த விசாரணையை நாங்கள் துவக்கி விட்டோம். உரிய நேரத்தில் வெளியிடுவோம்.

சீனாவிடம் இருந்து ஜெர்மன் 140 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரியுள்ளது. இதைவிட அதிக நஷ்ட ஈட்டை சீனாவிடம் அமெரிக்கா கோரும். நான் தொடர்ந்து 184 நாடுகள் என்று கூறிக் கொண்டு இருக்கிறேன். இதை நம்புவதற்கு கடினம், நினைத்து கூட பார்க்க முடியாதது'' என்றார்.

கொரோனா தொற்று பரவிய உடனே சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தால், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகள் பெரிய பொருளாதார அழிவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கலாம் என்று அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News