மோசமான ரோல்... அருவருக்கத்தக்க காட்சிகள் - ஜான்வி கபூருக்கு எதிராக கடும் கண்டனம்!
பெத்தி திரைப்படம்:
தெலுங்கு சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த ஆர் ஆர் ஆர் , பாகுபலி போன்ற படங்களின் தமிழ் டப்பிங் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே வரிசையில் இந்த பெத்தி திரைப்படமும் ரசிகர்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.
ஆம், ராம்சரண் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் பெத்தி திரைப்படம் மிக மோசமான விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் ஆனால் படத்தில் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு புலம்பி தள்ளுகிறார்கள் .

மோசமான கதாபத்திரம்:
குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருக்கும் ஜான்வி கபூர் இந்த திரைப்படத்தில் எதற்காக நடித்தார் என்றே பலருக்கும் தெரியவில்லை என மோசமாக விமர்சிக்கிறார்கள். ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் இடையே நடக்கும் இந்த ரொமான்டிக் காட்சிகள் மோசமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் இருப்பதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள் .
ஒரு படத்திற்கு ஹீரோயின் வேண்டும் என்பதற்காகவே ஜான்வி கபூர் சேர்க்கப்பட்டிருப்பது போல் அந்த படத்தில் தோன்றுகிறது. இடைவேளை காட்சி வரை படம் பார்த்தவர்களுக்கு ஊமக்குத்தாவும் குத்தி விட்டார்கள் என புலம்புகிறார்கள் .
கடும் கண்டனம்:

தியேட்டரில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களையே பலர் தியேட்டரில் இருந்து ஓடி விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமாக ஜான்வி கபூரின் கதாபாத்திரமும் அவரது காட்சிகளும் சித்தரிக்கப்பட்டதாக பலர் ஜான்வி கபூருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஜான்வி கபூரை காட்சிப்படுத்திய விதமும் கேமரா ஆங்கிளும் மிக மோசமாக அவரை கவர்ச்சி நடிகையாக காட்டுவதை தவிர அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.
