×

சிம்ரனை இந்த அளவுக்கு வேறு யாராவது ரசித்திருப்பார்களா? பிரபல இயக்குனரின் கவிதை!

கடந்த 2000ம் ஆண்டுகளில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
 

கடந்த 2003ஆம் ஆண்டு தீபம் என்பவருடன் திருமணம் நடந்தபின் திரையுலகிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த சிம்ரன் சமீபகாலமாக சில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் தற்போது மியூசிக் ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்த ஹிந்தி மியூசிக் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிம்ரனின் பாணியில் அமைக்கப்பட்டிருந்த இந்த நடன பாடலுக்கு யூட்யூபில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன

இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோ குறித்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது வித்தியாசமான பாணியில் கவிதை நயத்துடன் ரசித்து விமர்சனம் செய்துள்ளார். இந்த ரசனைவாதியின் மூளையிலிருந்து உதித்த கவிதை இதுதான்:

காதLook-கு ....
Look தேவையில்லை,
வயது தேவையேயில்லை,
மனது மட்டுமே பரந்து விரிந்து கிடந்தாலே போதுமானது!
சிம்ரன் அக்காலம் இக்காலம் என்றில்லாமல் காலம் கடந்தும் 
காதல் கடத்தும் வல்லமை வாய்ந்தவர்! தீவிர(ரசனை)வாதி!

சிம்ரனை இந்த அளவுக்கு வேறு யாரேனும் ரசித்திருப்பார்களா என்று எண்ணும் அளவுக்கு இருக்கும் இந்த கவிதை தற்போது வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News