×

உங்களையெல்லாம் பார்த்தால் கேவலமா இருக்கு - பிக்பாஸ் ஜூலி காட்டம்!

நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

 

மேலும், அம்மன் தாயி, Dr.S அனிதா MBBS , பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார். அப்படியிருந்தும் ஜூலி என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். சமீப நாட்களாக ட்விட்டர் பக்கமே தலைகாட்டாமல் ஒதுங்கியிருப்பதால் அவரை கேலி , கிண்டல் ஏதும் வருவதில்லை மாறாக ஜூலிக்கு திருமணம் என்ற சேதி அண்மையில் வெளியானது.

அதாவது பிக்பாஸ்  ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. அத்துடன் ஒரு இணையதள பக்கம் " பிரபல வட இந்திய தொழிலதிபருடன் லிவிங் டூ கேத்தரின் வாழ்ந்து வருவதாகவும், கடற்கரை ஓரத்தில் காதலருடன் போலீசில் சிக்கிய ஜூலி என கூறி பொய்யான தகவலை பரப்பி கிண்டலடித்து செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜூலி இது குறித்து தனது ட்விட்டரில் "போலிச் செய்தியைப் பரப்பி என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. தயவுசெய்து இது போன்று ஒரு நபரை அவதூறு செய்து செய்தி வெளியிடும் ஊடகங்களை ஊக்குவிக்க வேண்டாம். மேலும், ஊடகங்களில் பரவி வரும் எனது திருமணம் தொடர்பான செய்திகள் முற்றிலும் போலியானது. என்று ஜூலி காட்டமாக தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News