×

ஆஹா கல்யாணம்...  பொண்ணு மாப்பிள ஜோரு - திருமண தேதியை அறிவித்தார் ராணா !

தமிழில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராணா அதிகமாக பேசப்பட்டார். படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பெருமை பாராட்டப்பட்டாலும் அதற்கு ஈடாக காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் ராணா.

 

சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் நடக்கும் என்பதற்கு உதாரணமாக ராணாவின் திருமண செய்திகள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது கடந்த 12-ம் தேதி  ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவர் தான் எனது காதலி என உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர்.  ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ராணா - மஹீகா பஜாஜ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து தற்போது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு பேட்டி ஒன்றில் மகனின் திருமணத்தை குறித்து பேசுகையில், வருகிற  ஆகஸ்ட் 8-ந் தேதி ராணாவின் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனவால் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தான் இந்த திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை ஊரடங்கில் தளர்வு ஏற்படவில்லை என்றால் நிச்சயதார்த்தை போலவே நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என டோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News