×

வாவ்!...வெறித்தனம்...இது விஜய்க்கு வேற லெவல்தான் - என்ன சொல்லுது புதிய போஸ்டர்?

மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் 3வது லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தை தீ பிடிக்க வைத்துள்ளது. 
 

அதில் விஜயும் விஜய் சேதுபதியும் ஒருவருக்கொருவர் கர்ஜித்துக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விஜயை இதுவரை யாரும் இப்படி பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், தொடக்கம் முதலே மென்மையான காதல் செய்யும் கதாபாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி தற்போது மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். 

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், வாயை அதிகம் திறந்து கூட பேசாமல்(பாடல் காட்சி உட்பட), குறிப்பாக உதட்டை கூட பெரிதாக அசைக்காமல் நடித்து வருபவர்தான் விஜய். அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்றதுமே ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவுமே இருந்தது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2வது லுக் ஆகியவை வெளியாகி ஆச்சர்யங்களை கொடுத்தது. குறிப்பாக கடைசியாக வெளியான 2வது லுக் போஸ்டரில் வேறு மாதிரியான விஜயை பார்க்க முடிந்தது. லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து, இதுவரைக்கும் அவர் செய்யாத ஒன்றை செய்து வருகிறார் என உணரமுடிந்தது.

தற்போது விஜயும், விஜய் சேதுபதியும் வெறித்தனமாக, ஆக்ரோஷமாக கத்திக்கொண்டே ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ளும் போஸ்டர் ஆச்சர்யபடுத்தியிருப்பதோடு, ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இப்படி ஒரு போஸ்டர் இதற்கு முன் விஜய்க்கு அமையவில்லை. அல்லது வேறு எந்த இயக்குனரும் விஜயை இப்படி யோசிக்கவே இல்லை. விஜய் ரசிகர்களே இதை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News