×

ஆஹா இப்படி ஒரு எம் எல் ஏவா? தன் திருமணத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரபு!

கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபு கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபு கல்லூரி மாணவி ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் இருந்தாலும், இன்னமும் இங்கும் சாதிரீதியான மோதல்கள் நடந்துகொண்டு வருகின்றன. அதிலும் சாதிமறுத்து திருமணங்கள் நடக்கும் போது அது ஆணவக்கொலை வரைக்கும் செல்கின்றன. இந்நிலையில்  கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த பிரபு கல்லூரி மாணவி ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தை பிரபுவின் பெற்றோரே தலைமையேற்று மிகவும் எளிமையான முறையில் நடத்தி வைத்தனர். விரைவில் முதல்வரை சந்தித்து தங்கள் திருமணத்துக்காக வாழ்த்துகளைப் பெற உள்ளாராம் பிரபு.

சாதியை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகள் ஓட்டுக்காக அதை வளர்க்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு எம் எல் ஏ அனைவருக்கு  முன்மாதிரியான காரியம் செய்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News