வாவ்... என்ன ஒரு பாசம் தங்கச்சி மீது: இணையத்தை ஈர்க்கும் சமீரா ரெட்டியின் குழந்தைகள்!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் தற்ப்போது தன் குழந்தைகள் குடையில் அமர்ந்திருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு "அண்ணன் தங்கை பாசத்தை" வெளிக்காட்டியுள்ளார். இந்த குழந்தைகளின் கியூட்டான போட்டோ அனைவரையும் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைக்கிறது. மேலும், எக்கச்சக்க லைக்ஸ் , கமெண்ட்ஸ் என குவிந்து வருகிறது.