×

வாவ்.. யார் இந்த ஹீரோயின்? - ஈஸ்வரன் பட புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு...

 

கொரோனா இடைவெளியில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, அதே வேகத்தில் மாநாடு பட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். சிம்பு இதே வேகத்தில் நடித்தால் மாநாடு படம் விரைவில் முடிவடைவதோடு, வருடத்தில் 6 படத்தில் சிம்பு நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என சினிமா திரையுலகம் கூறுகிறது. 

இந்நிலையில், சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த சிம்பு தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் என எல்லாவற்றிலும் இணைந்து தன்னுடையை படங்கள் குறித்த அப்டேட்டுகளை கொடுத்து அவரின் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார்.

மாநாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்த சிம்பு, தற்போது ஈஸ்வரன் படப்பிடிப்பில் ஹீரோயினுடன் இணைந்து எடுக்கப்பட்ட  புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

ESWARAN 🔥

A post shared by STR (@str.offcial) on

From around the web

Trending Videos

Tamilnadu News