Categories: Cinema News latest news

மாமாவது மாப்பிள்ளையாவது ஏறி மிதிச்சிட்டு போயிருவேன்.. கொந்தளித்த ‘யானை’ ஹரி..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் யானை. அருண் விஜய் ஹீரோவாக நடிக்க, பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்து உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் அனுபவம் பற்றி இயக்குனர் ஹரி , நடிகர் அருண் விஜய், பிரியா பவானிசங்கர் என திரை நட்சத்திரங்கள் பல்வேறு நேர்காணலில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அதில் இயக்குனர் ஹரி ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார் அப்போது பேசுகையில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். சார் நீங்க எப்போது வேகமாக படமெடுப்பீர்கள். அதே வேகத்துக்கு மற்றவர்களும் ஈடுகொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள்.

ஆனால் இப்பட ஹீரோ உங்க மச்சான் அருண் விஜய் அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருந்தது என கேட்கையில், ‘ ஷூட்டிங் என்றால் எனக்கு எல்லாம் ஒன்று தான், அங்கு மாமனாவது மச்சானாவது ஏறி மிதிச்சிட்டு போயிட்டே தான் இருப்பேன்.  அருண் விஜயும் தனது கதாபாத்திரம் உணர்ந்து தான் இப்படத்தில் நடித்து இருந்தார்.

இதையும் படியுங்களேன் – ரோப் அறுந்து 20 அடி பள்ளத்தில் விழுந்த விஜயகாந்த்.. அடுத்து அவர் சொன்ன சம்பவம் தான் ஹைலைட்…

மச்சான் என்பதால் கூடுதல் சௌகரியம். மற்ற நடிகர்கள் என்றால் அடிபட்டது என்றால் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிடுவேன். ஆனால் இது மச்சான் என்பதால், என்ன எல்லாம் சரி ஆயிடுச்சா ? ஷூட்டிங் ரெடியா .. ஹ்ம் போலம் போலாம்’ என உரிமையோடு தான் வேலை வாங்குனேன் என மிக வெளிப்படையாக அந்த நேர்காணலில் நடிகர் அருண் விஜய் பற்றி இயக்குனர் ஹரி குறிப்பிட்டு இருந்தார்.

Manikandan
Published by
Manikandan