Categories: Cinema News latest news

அந்த ஊரு சினிமாவ அசிங்க படுத்திய ராக்கி பாய்.! ஒரு வீடியோவில் மொத்த மானமும் போச்சே..,

கன்னட சினிமா உலகை தற்போது இரண்டு பாகங்களாக பிரித்து விடலாம். அதாவது கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன், கே.ஜி.எஃப் திரைப்படத்திற்குப் பின் என்று பிரித்து விடலாம். அந்த அளவிற்கு தற்போது கன்னட சினிமா வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்னர் கர்நாடகாவில் கன்னட சினிமா அதிக அளவில் திரையிடப்படாது. அதற்கு எதிர்மாறாக தெலுங்கு சினிமாக்களே அங்கு அதிகம் திரையிடப்படும். ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான RRR திரைப்படத்திற்கு கூட தெலுங்கு பதிப்பு தான் அதிகமான கர்நாடக திரையரங்குகளில் ரிலீசானது.

ஆனால், தற்போது கே.ஜி.எப் அதனை மாற்றி அமைத்துள்ளது. கே.ஜி.எப் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய சினிமாவை புரட்டி போடும் அளவுக்கு, முந்தைய சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கே ஜி எஃப் நாயகன் யாஷ் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ ஒரு கிராமம் மிகவும் பஞ்சத்துடன் இருந்தது. அப்போது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். எல்லோரும் அவளை கிண்டல் செய்தனர். ஆனால், அந்த சிறுவன் கையில் வைத்திருந்த குடையின் பெயர்தான் மழை வரும் என்ற நம்பிக்கை. அந்த சிறுவன்தான் நான்.’ என மிகவும் உருக்கமாக தனது நன்றியை தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் –  வீட்டிற்கு வரலாமா.? வைரமுத்து போனை சட்டெனெ துண்டித்த A.R.ரகுமான்.! அடுத்து நடந்தது வேற லெவல்..,

மேலும், இதுவரை கன்னட திரைஉலகம் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. தற்போது இந்த திரைப்படம் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறி, இதுவரை கன்னட சினிமா வெளியுலகத்துக்கு தெரியாததை குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார் என பேசி வருகின்றனர்.

 

Manikandan
Published by
Manikandan