'டாக்ஸிக்' படத்தின் தந்தையர் தின ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட யாஷ்!
ஒரே படத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் யாஷ். அந்த படம் தான் 'கே.ஜி.எஃப்'. அதன் பிறகு 'கே.ஜி.எஃப் சேப்டர் 2'-வும் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.
யாஷ் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடித்திருக்கும் புதிய படமான 'டாக்ஸிக்'-ஐ நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதன் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ஏற்கனவே, நான்கு முறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூன் 21) தந்தையர் தின ஸ்பெஷலாக அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களும் இருக்கும் போஸ்டரை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்த யாஷ் "படத்தின் புதிய ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 26, 2026" என்று அறிவித்துள்ளார்.
இதில் யாஷுடன் இணைந்து 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, அமித் திவாரி, ஹூமா குரேஷி, சுர்ஜித் கோபிநாத், தாரா சுதாரியா, சுதேவ் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
Honour Thy Father...#Toxic In Cinemas Worldwide from 26-08-2026#ToxicTheMovie#Nayanthara @advani_kiara #TaraSutaria@humasqureshi @rukminitweets #GeetuMohandas @VishalMMishra #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva #PrashantDileepHardikar… pic.twitter.com/oAlW0JdldO
— Yash (@TheNameIsYash) June 21, 2026
