யூடியூப் அலறப்போகுது!.. இன்னைக்கு சாயங்காலம் சம்பவம் பண்ண வரும் டாக்ஸிக் டிரைலர்!..

 
yash

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று, ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 7.01 மணிக்கு வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள புதிய ஆக்‌ஷன் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள டாக்ஸிக் படத்தில் யஷ் மற்றும் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், ‘டாக்ஸிக்’ ஒரு பீரியட் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’ படங்களுக்குப் பிறகு யஷ் மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மீண்டும் இணைந்துள்ளனர். 

toxic

‘டாக்ஸிக்’ படத்தை கேவிஎன் ப்ரோடக்‌ஷன் மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் க்ரியேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

பல காரணங்களுக்கக வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், ‘டாக்ஸிக்’ மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

Tags

From Around the web