டாக்ஸிக் டிக்கெட் புக்கிங் எப்போது ஓபன் பண்றாங்க?
கன்னட நடிகர் யாஷ் நடித்து பல மாதங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து, பல முறை ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி ரசிகர்களை காக்க வைத்த படம் தான் 'டாக்ஸிக்'.
ஒரு வழியாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி கன்னடம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் இதில் யாஷுக்கு டூயல் ரோல்கள். மேலும், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகிய ஹீரோயின்ஸ் முக்கிய கேரக்டர்களில் வலம் வரப்போகிறார்கள்.
8 days to step into the world of #ToxicTheMovie🔥
— KVN Productions (@KvnProductions) August 18, 2026
Nationwide Bookings open from 21st August!🎟⏳️#TOXIC: A Fairy Tale for Grown-Ups In Cinemas Worldwide from 26.08.2026#ToxicOn26thAug@TheNameIsYash #Nayanthara @advani_kiara #TaraSutaria @rukminitweets @humasqureshi… pic.twitter.com/Ndxm78D6uz
ஆல்ரெடி ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை ஏத்தி விட்டது. தற்போது, இந்த படத்துக்கான டிக்கெட் புக்கிங்கை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகமெங்கும் ஓபன் பண்ணப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.