×

இனி என்னால் இதை செய்ய முடியாது... சோகத்தில் யாஷிகா

சில தினங்களுக்கு முன் தையல் போடப்பட்ட வீடியோவை வெளியிட்ட யாஷிகா தற்போது தன் தோழியுடன் கடைசியாக பங்கேற்ற பார்ட்டி வீடியோவை வெளியிட்டார்.
 
73de43a5-50a4-4aaf-a0ce-af8438f50a8f

மாமல்லபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது உயிர்த் தோழி மரணமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை இருட்டு அறையில் முரட்டு குத்து, சோம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார்.

yashika

சமீபத்தில் தோழி கொடுத்த பார்ட்டி முடிந்து காரில் வந்து கொண்டிருக்கும் போது விபத்தாகி தோழி பவானி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். யாஷிகா உள்ளிட்ட நண்பர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு பின் யாஷிகா டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு செல்லாமல் நர்ஸ் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில தினங்களுக்கு முன் தையல் போடப்பட்ட வீடியோவை வெளியிட்ட யாஷிகா தற்போது தன் தோழியுடன் கடைசியாக பங்கேற்ற பார்ட்டி வீடியோவை வெளியிட்டார். மேலும், ஜிம் ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை பதிவிட்டு இதுபோல் தற்போது என்னால் செய்யமுடியாது என்று ஆதங்கமாக கூறியுள்ளார். அதற்கு பலர் உயிர் மிஞ்சியதே பெரிய விஷயம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

yashika
 

From around the web

Trending Videos

Tamilnadu News