×

கொரோனாவில் முடங்கிய சினிமா சீரியல் நடிகையான யாஷிகா - ப்ரோமோ வீடியோ இதோ!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.  

இந்நிலையில் தற்ப்போது இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சீரியலில் நடிப்பதை தனது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். யாஷிகாவை சீரியலில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.  இருந்தாலும் படங்களில் நடித்துவிட்டு சின்னத்திரைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என ரசிகர்கள் அறிவுரை கூற துவங்கியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News