துபாயில் ஸ்கை டைவிங்.. யாஷிகாவுக்கு இதலாம் வருமா?.. அதிர வைக்கும் வீடியோ...

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள அவர் எங்கு எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அங்கு விமானத்திலிருந்து குதிக்கும் ஸ்கை டைவிங் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.