×

சிறுமியை பாலியல் வழக்கு... குற்றவாளிக்கு ஆதரவு தரும் யாஷிகா...

அனிதாவை அடுத்து யாஷிகா ஆனந்தும் பேர்ல் வி பூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
 
Yashika Anand latest Sizzling Photo Shoot (4)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிவி நடிகர் பேர்ல் வி பூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் யாஷிகா.

2013ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பேர்ல் வி பூரி. அவர் நாகின் 3 தொடரிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேர்ல் வி பூரி மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவரை மும்பை போலீசார் கைது செய்து வசாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பேர்ல் வி பூரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பல நடிகைகள் பேர்ல் வி பூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

நாகின் 3 தொடரில் பேர்ல் வி பூரியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நடிகை அனிதா ஹசநந்தனி கூறியிருப்பதாவது, பேர்ல் வி பூரி பற்றிய செய்தி அறிந்தேன். எனக்கு அவரை தெரியும். இது உண்மை இல்லை, உண்மையாக இருக்கவும் முடியாது. எல்லாமே பொய். விரைவில் உண்மை வெளியே வரும். லவ் யூ பேர்ல் வி பூரி என்று தெரிவித்துள்ளார்.

அனிதாவை அடுத்து யாஷிகா ஆனந்தும் பேர்ல் வி பூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். யாஷிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு தெரிந்த அன்பானவர்களில் பேர்ல் வி பூரியும் ஒருவர். நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். என் நண்பர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புகிறேன். பாசிட்டிவாக இருப்போம் என்றார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News