நண்பர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்க கூடாது- யாஷிகா ஆனந்த்
துருவங்கள் 16 படம் மூலம் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து பாடம், தம்பி ராமைய்யா இயக்கிய மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கான அங்கிகார்ரம் பெரிதாக கிடைக்கவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தன் மூலமே யாஷிகா பலரது கவனத்திற்கு வந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இடையில் சென்னை ஈசிஆர் சாலையில் ஒரு விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். அதே வேலை சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. அவர் கூறியபோது, நான் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளவில்லை. காதல் தோல்விக்கு பிறகு தனிமையில் இருக்கிறேன். அதனால் என்னை நானே காதலிக்க கற்றுக் கொண்டேன். நண்பர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற பாடத்தை சினிமா அனுபவங்கள் கற்றுக் கொடுத்தது என்று பகிர்ந்துள்ளார்.
