ரஜினியின் அந்த 70s, 80s' லுக்... மகனை வைத்து தனுஷ் செய்யப்போகும் தரமான சம்பவம்!

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்
 
dhanush

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வொண்டர்பார் என்ற நிறுவனம் தொடங்கி தனது படங்களை தயாரித்து நடித்தார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூடினார். தற்போது அந்த நிறுவனம் மீண்டும் படம் தயாரித்து வருகிறது. ராஜ் கிரண் நடித்த பவர் பாண்டி படம் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக அடையாளப்படுத்தினர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை படங்க்களை இயக்கினார். தற்போது பல படங்களை கமிட் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

தனுஷுக்கு இரண்டு மகன்கள் உண்டு. இதில் மூத்த மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்று நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. 

yatra

இந்த நிலையில் யாத்ரா அறிமுகம் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் இயக்குகிறார். ஆர்டேக் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியின் ஆரம்பகால படங்களை நினைவூட்டும்  கதாபாத்திரத்தில் யாத்ரா நடிக்க உள்ளார். டெஸ்ட் ஷூட் விரைவில் நடைபெறும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷுன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

From Around the web