×

நேரடியாக ஓடிடியில் தரிசனம் தர வருகின்றது சிவகார்த்திகேயன் படம்...
 

உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன் தயாரிப்பிள் உருவான வாழ் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றது.

 
sivakarthikeyan-3-06-1488787284

நடிகர் சிவகார்த்திகேயன் யாராலும் தொட முடியாத உயரத்தில் பரமாண்டமாக வளர்ந்து நிர்கிறார். சமீபத்தில் எச். ராஜா பேசியதற்கு கூட எந்த வித சலனமுமின்றி எளிமையாக கையாண்டார். 

நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தனது பல முகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

அப்படி இவர் தயாரிப்பில் முதன் முதலில் வெளியான கனா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது.

அதன்பின் தனது இரண்டாவது தயாரிப்பில் ரியோ கதாநாயகனாக நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்திருந்தார்.

மேலும் தற்போது அருவி பட இயக்குனர் இயக்கத்தில் உருவாகி வரும் வாழ் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், நேரடியாக ஓடிடியில் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாழ் படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News