×

ஈ, காக்காவுக்கு கூட அனுமதி இல்லையாம் - மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங் !

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், உருவாகி வருகிறது 'இந்தியன் 2' திரைப்படம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி பல்வேறு பிரச்சனைகளால் அவ்வபோது தடைபெற்று வந்தது. இந்நிலையில் அரசியல் வேலைகளில் பிஸியாக இருக்கும் கமல் இப்போது இந்த படத்துக்காக மொத்தமாக 50 நாட்களை ஒதுக்கியுள்ளார்.

அதனால் படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்க வேண்டுமென ஷங்கர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது சென்னையில் ஈவிபி யில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் நடந்த படப்பிடிப்புகளின் போது நிறைய புகைப்படங்கள் கசிந்ததால் ஷங்கர் இந்த முறை படப்பிடிப்பு தளத்தில் இருந்து எந்த தகவலும் வெளியே செல்லக்கூடாது  என உத்தரவு பிறப்பித்துள்ளாராம். அதற்காக வெளிநபர் யாரும் படப்பிடிப்புத் தளத்த்தில் அனுமதிக்கப்படவில்லையாம். மேலும் படத்தில் வேலை செய்பவர்களின் செல்போன்களும் செட்டுக்கு வெளியேவே வாங்கி வைத்து விடுகிறார்களாம். இதனால் படக்குழுவாக அறிவித்தால்தான் எந்த செய்தியும் வெளியாகும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News