×

ஆம்.. நான் கர்ப்பமாக இருக்கிறேன் - உறுதி செய்த கீதாஞ்சலி செல்வராகவன்!

கர்ப்பமானதை உறுதி செய்த செல்வராகவன் மனைவி

 

தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில்  விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்ட இவர் தன் ஒவ்வொரு படைப்புகளிலும் அவலங்களின் அழகையும்  அவமானங்களின் வெடிப்புகளையும் துணிவுடன் திரையில் கொண்டு வருபவர்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு  நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து ஒரு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு  2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் இதனை உறுதி செய்யாத நிலையில் சற்றுமுன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான் மூன்றாவது முறை கர்ப்பம் தரித்துள்ளதை புகைப்படத்துடன் கூறியுள்ளார். மேலும், அடுத்த வருடன் ஜனவரி மாதம் தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதையும் தெரிவித்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News