×

நேற்று ஊரடங்கு: நேற்று முன் தினம் டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா ?

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் மட்டும் தமிழகத்தில் 220 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு போக்குவரத்து, வணிகம், நிறுவனங்கள் என அனைத்தும் விடுமுறை அறிவித்தன. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் விடுமுறை அளிக்கப்பட்டன.

இதனால் குடிமகன்கள் நேற்று முன் தினமே கடைக்கு சென்று தேவையான சரக்குகளை வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் சனிக் கிழமை மட்டும் மது விற்பனை பல மடங்கு அதிகமானதாக சொல்லப்பட்டது. அன்றைய மது விற்பனை கிட்டதட்ட 220 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக சனி, ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களில் ரூ.120 முதல் ரூ.135 கோடி வரை டாஸ்மாக்கில் மதுவிற்பனை நடைபெறும். ஆனால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 2 மடங்கு மது விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News