வைரலாகும் யுவன், ஆண்ட்ரியா பாடிய நமக்காய் ஒரு வானம் பாடல்!

 
Yezhu Kadal Yezhu malai

நிவின் பாலி, அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதை 'தங்க மீன்கள்' இயக்குநர் ராம் தான் இயக்கியிருக்கிறார்.

இதில் முக்கிய ரோலில் சூரி நடித்திருக்கிறார். இதை சுரேஷ் காமாட்சியின் 'V ஹவுஸ் புரொடக்ஷன்' நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

சமீபத்தில் தான் இதன் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தற்போது, யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'நமக்காய் ஒரு வானம்' என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலை யுவனுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா.

From Around the web