கமலுக்கே டஃப் கொடுப்பார் போலயே.. 10 வேடங்களில் நடிக்கும் யோகிபாபு
கமலுக்கே டஃப் கொடுப்பார் போலயே.. அடுத்து 10 வேடங்களில் நடிக்கும் யோகிபாபு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் யோகிபாபு. பிரப தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவில் சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் அமீர் நடித்த யோகி படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். யாமிருக்க பயமேன் படத்தில் இவர் நடித்த பன்னி மூஞ்சி வாயா என்ற கேரக்டர் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் யோகிபாபு தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அறிமுக இயக்குனர் கிஷோர் குமார் இயக்கும் இந்த படத்தில் ய்டோகிபாபு 10 வேடங்களில் நடிக்கிறார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்தார். அதற்கு பின் யோகிபாபு இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
