Categories: Cinema News latest news

ஆளே இல்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடித்து விளையாடும் யோகி பாபு.! எங்ககிட்டையும் அது இருக்கு.!

தற்போது வாரம் வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு மூன்று திரைப்படங்களுக்கு மிகாமல் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றில் கண்டிப்பாக நடிகர் யோகிபாபு இருக்கிறார். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு.

அவரது காமெடிகள் படத்தின் கதைக்கேற்ப ஒர்க்கவுட் ஆகுதோ, இல்லையோ ஆனாலும் அவர் இருக்கிறார். ஏனென்றால் தற்போது காமெடி நடிகர்கள் மத்தியில் மிகுந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வடிவேலு ஹீரோவாக மாறிவிட்டார், சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டார், நடிகர் விவேக் சார் மறைந்துவிட்டார்.

சூரி, சதீஸ் கூட ஹீரோவாக மாறிவிட்டனர். இதன் காரணமாக தற்போது காமெடியன்கள் மத்தியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சூரி, சதீஷ் ஆகியோரை தாண்டி தற்போது யோகிபாபு காட்டில் அடைமழை தான்.

இதையும் படியுங்களேன் – நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க.! குஷி படத்தில் விஜய்க்கு பதிலா யார் நடிக்க இருந்தது தெரியுமா?!

அவரிடம் வந்து கதை சொல்லும் இயக்குனர்களுக்கு அவர் இல்லை என்று கூறாமல், கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். ஆனால் தயாரிப்பாளரிடம் கூறி சம்மதம் வாங்குங்கள் அதன் பிறகு என்னிடம் வந்து கூறுங்கள் என்று சொல்லி விடுகிறாராம்.

இதனால் யோகி பாபு கால்ஷீட்டை கோடம்பாக்கத்தில் பலர் வைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களை தேடி சுற்றி வருகின்றனராம். ஆளே இல்லாத கிரவுண்ட்டில் சிக்ஸர் அடித்து என்ன பயனென்று கோடம்பாக்கத்தினர் கிசுகிசுத்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan