அதுக்குள்ள 300வது படமா?.. ஜெட் வேகத்தில் யோகி பாபு.. அர்ஜுனன் பேர் பத்து ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

 
yogi

நடிகர் யோகி பாபுவின் 300வது படமான அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

yogi 

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாக கொண்டு நகைச்சுவையும் உணர்ச்சிகளும் கலந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

babu

யோகி பாபுவுக்கு ஜோடியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார்.  மேலும், காளி வெங்கட், அருள்தாஸ், மைனா நந்தினி, சென்றாயன், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்.

yogi

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. யோகி பாபுவின் 300வது படம் என்பதால் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Tags

From Around the web