×

சோறு தண்ணியில்லாமல் பாக்யராஜ் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தேன்!

சோறு தண்ணியில்லாமல் பாக்யராஜ் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தேன்!

 
சோறு தண்ணியில்லாமல் பாக்யராஜ் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தேன்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடிய நடிகனான யோகி பாபு இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதெல்லாம் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அவர் காமெடி காட்சிகள் எல்லா படங்களிலும் இடம்பெற்றுவிடுகிறது. 

இவர் மிக கூறிய காலத்தில் ஓஹோன்னு வளர்ந்து தன் லட்சியங்களை நிறைவேற்றி வருகிறார். அண்மையில் கூட திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் யோகி பாபு கலந்துக்கொண்டார். 

திரைத்துறையில் முன்னணி காமெடியான வளர்ந்தாலும் தான் முன்னேறி வந்த படிக்கட்டுகளை பார்த்து மதிக்க தெரிந்தவர். எப்போதும் ஒரே சீராக இருக்கும் நடிகர் அவர். இந்நிலையில், முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்று பேசிய யோகி பாபு, நான் ஒரு 12 வருஷத்திற்கு முன் பாக்யராஜ் சார் வீட்டு வாசலில் சோறு தண்ணி இல்லாமல் வாய்ப்புக்காக காத்து கிடந்தேன். ஒரு நாள் கூப்பிட்டு சித்து +2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் நான் நடித்துள்ளேன் என்பது சாந்தனுவுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை என கூறினார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News