Categories: Cinema News latest news

வடிவேலுவாக மாறிய யோகி பாபு… அது மட்டும் செஞ்சுறாதீங்க பல வருஷம் காணாமல் போயிடுவீங்க..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அப்போது செய்த காமெடிகள் இப்பொது வரை ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவர் செய்த காமெடிகள் மீம்ஸ்-ஆக பரவி பலரின் சோகங்களை நிக்கி சந்தோசத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

என்னதான் தன்னைத்தானே தாழ்த்தி காமெடி செய்து ரசிகர்களை வடிவேலு சிரிக்கவைத்தாலும் அவரை பற்றி நல்ல விஷியங்கள் வருகிறதோ, அதே அளவிற்கு தீய செய்திகளும் வெளியாகும்.

அந்த வகையில், வடிவேலு பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும் போது, படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரிடம் இன்று எந்த காட்சிகள் எல்லாம் எடுக்கப்போகிறோம் என ரிகர்சல் பார்த்துவிட்டு தான் நடிக்கவே தொடங்குவாராம். ஒரு நாளிற்கு வெறும் 2 -3 மணி நேரம் தான் படத்தில் நடிப்பாராம்.

இதையும் ஒரு காரணமாக கொண்டு, ஒரு காலத்தில் வடிவேலை திரையுலகமே கைவிட்டது என்றே கூறலாம். தற்போது அதே பாணியை நடிகர் யோகிபாபு கையாண்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- அசுரன் நாயகி செஞ்ச காரியத்தால் ஆடிப்போன திரையுலகம்… நீதான்மா உண்மையான இந்திய குடிமகள்…

ஆம். யோகிபாபு தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் இன்று எந்த மாதிரி காட்சிகள் எடுக்க போகிறோம் என கேட்டு தான் நடித்துவருகிறாராம். அதுபோல, ஒரு நாளிற்கு 3 அரை மணி நேரம் தான் நடிக்கிறாராம். இதே தொடர்ந்தால், வடிவேலுக்கு ஏற்பட்ட  நிலைமை தான் உங்களுக்கும் வரும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan