×

வலிமை பற்றி யோகிபாபு... செம சூடான தகவல்...

​​நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது ட்விட்டரில் நவரசா ஆந்தாலஜி படத்தின் அரவிந்த் சாமி மற்றும் தான் தோன்றும் படக் காட்சிகளை புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.  
 
Valimai-Update-1

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் அஜித்- எச்.வினோத் இணையும் இரண்டாவது திரைப்படம் வலிமை.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு பெரும் கோர்ட் படமாக பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் வலிமை படத்தில் அஜித்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் தொடர்பான அப்டேட்டுகள் கொரோனா குறைந்த பின்னர் ஒவ்வொன்றாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் தல அஜித்துடன் பிரபல நகைச்சுவை நடிகர் மீண்டும் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

ஆம், ​​நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது ட்விட்டரில் நவரசா ஆந்தாலஜி படத்தின் அரவிந்த் சாமி மற்றும் தான் தோன்றும் படக் காட்சிகளை புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.  அப்போது ரசிகர் ஒருவர் யோகிபாபுவிடம் “அண்ணா.. வலிமை படத்தில் நீங்களும் பணிபுரிந்தீர்களா?” என கேட்டதற்கு யோகிபாபு, “ஆமா ப்பா” என பதில் சொல்லியிருக்கிறார்.

முன்னதாக வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களிலும் தல அஜித்துடன் காணப்பட்ட யோகிபாபு மண்டேலா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது. அண்மையில், தளபதி-65 ல் தான் நடித்திருப்பதையும் ட்விட்டரில் ரசிகர் ஒருவருக்கு உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News