விஜய் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளு சபா காமெடி நிகழ்சியில் மூலையில் கும்பலோடு கும்பலாக நின்றிருந்த நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. கடந்த 15 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக போராடி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார்.
வடிவேல் ஃபீல்டிலேயே இல்லை. சந்தானம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். விவேக்கும் மறைந்துவிட்ட நிலையில் தமிழ் சினிமா திரையுலகம் காமெடிக்கு யோகிபாபுவை மட்டுமே நம்பியிருக்கிறது.
எனவே, விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் 2ம் கட்ட நடிகர்கள் திரைப்படத்திலும் யோகிபாபுதான் நடித்து வருகிறார். ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அவரின் சம்பளம் உயர்ந்துள்ளது. காமெடியானாக நடித்தாலும், தர்மபிரபு, கூர்கா போன்ற காமெடி கதைகளிலும், மண்டேலா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், டாப் 10 கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார். Star domain online என்கிற பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அவர் 9வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் காமெடி என்னவெனில் சிவகார்த்திகேயன் 8 வது இடத்தையும், விஜய் சேதுபதி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த செய்தியை யோகிபாபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இது உங்களுக்கே ஓவாராக இல்லையா?’ என பதிவிட்டு வருகின்றனர்.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…