Categories: Cinema News latest news

கவுண்டமணி, வடிவேல் ரூட்டில் போகும் யோகிபாபு….. இனிமேலாவது காமெடி எடுபடுமா?…

தமிழ் சினிமா உலகில் ஜாம்பாவனாக இருந்தவர் கவுண்டமணி. இவர் படத்தில் நடிக்கிறார் என்றாலே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். 20 வருடங்கள் இவரின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. இவருக்கு பின் வந்தவர் விவேக்.இவரும் பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

அவரின் கட்டத்தில் வந்தவர்தான் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என ரசிகர்கள் இவரை அழைத்தனர். பல வருடங்கள் இவர் ரசிகர்களை சிரிக்க வைத்தார். கவுண்டமணி தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவை காட்சிகளை அமைக்க ஒரு டீமை வைத்திருப்பார்.

அவர்கள் எழுதும் காமெடி காட்சிகளில்தான் அவர் எப்போதும் நடிப்பார். அதேபோல், வடிவேலும் அதை பின்பற்றினார். தற்போது யோகிபாபு காலம். சிறிய சிறிய வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்குமளவுக்கு முன்னேறியுள்ளார்.

Yogibabu

தற்போது இவரும் கவுண்டமணி, வடிவேல் ரூட்டில் தனக்கென ஒரு டீமை உருவாக்கியுள்ளாராம். இனி யோகிபாபு நடிக்கும் படங்களில் அவர் எழுதும் காமெடி காட்சிகளே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

yogibabu

கவுண்டமணி, வடிவேலுவை போல் யோகிபாபு பெரிதாக சிரிக்க வைப்பதில்லை என பரவலான கருத்து இருக்கும் நிலையில், இனிமேலாவது அவர் ரசிகர்களை சிரிக்கவைப்பார் என நம்புவோம்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா