யோகிபாபுவின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவாரா, கமல்?
லொள்ளு சபாவில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் தனக்கே உரிய ஸ்டைலில் அதாவது அழகற்ற முகத்தையும் தனக்கான பிளஸ் பாயிண்டாக்கி காமெடியில் கலக்கி வருகிறார். இவரது தலையைப் பார்த்தால் பம்பைத்தலை மாதிரி ஹேர் ஸ்டைல் இருக்கும். பெரிய நீண்ட முகம் பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும். ஆனாலும் இவரது டயலாக் டெலிவரி கலக்கலாக இருக்கும். அப்பாவித்தனம் கலந்த இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் நன்றாகவே வரவேற்புக்குள்ளானது.
சென்னையில் நடைபெற்ற அர்ச்சுனன் பேர் 10 இசை வெளியீட்டு விழாவில் காமெடி நடிகர் யோகிபாபு கலந்து கொண்டு தனது சினிமா பயணம், பட இயக்குனருடனான நட்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பேசிய போது இதுவரை சேர்ந்து நடிக்காத ஹீரோக்கள் பற்றியும் இப்படி பேசினார். எந்த ஹீரோயின் நடிக்கிறார் என்பது முக்கியம் அல்ல. நல்ல கதை தான் முக்கியம். வெளியூர்ல இருந்து சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்தவர்களுக்கு மட்டும் கஷ்டம் கிடையாது.
சென்னையில இருக்குறவங்களுக்கும் கஷ்டம். அதை நான் 24 வருஷம் அனுபவத்துல சொல்றேன். 2009ல யோகி தான் தெரியும். அதுக்கு முன்னாடி லொள்ளு சபால தான் எல்லாருக்கும் தெரியும். 300 படங்கள்ல நடிச்சாச்சு. இதுவரை சேர்ந்து நடிக்காதது கமல் சார்தான். அதுவும் கூடிய விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன் என்றார் சிரித்துக் கொண்டே யோகிபாபு.
