×

விஜயகாந்தை சந்தித்த யோகிபாபு – எதற்குத் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக கோலோச்சி வரும் யோகிபாபு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரப்படி நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் கண்ணை மூடிக் கொண்டு யோகி பாபு என சொல்லிவிடலாம். இந்நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதற்குத் திரையுலகை சேர்ந்தவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

இது குறித்து கேட்டபோது அவர்களுக்காக தனியாக வரவேற்பு வைக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இப்போது தனது வரவேற்புக்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறார். அதை முன்னிட்டு தேமுதிக தலைவரும் மூத்த நடிகருமான விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News