×

சிம்புவை பங்கமாய் கலாய்த்த யோகிபாபு: ட்ரிப் டீசர்

காமெடி நடிகராக இருந்தாலும் நடிகர் யோகிபாபு உடன் நடிக்கும் மாஸ் நடிகர்களை கூட கலாய்ப்பார் என்பது தெரிந்ததே. குறிப்பாக தர்பார் படத்தில் ரஜினியை பல காட்சிகளில் கலாய்த்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்களும் காமெடியாக எடுத்து கொண்டனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான ’ட்ரிப்’ படத்தின் டீசரில் சிம்புவை கலாய்த்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

யோகிபாபு, சுனைனா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’ட்ரிப்’ படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸார் சற்று முன் வெளியாகி உள்ளது. ஒரு அடர்ந்த காட்டுக்குள் யோகிபாபுவும் அவரது நண்பர்களும் ’ட்ரிப்’ செல்கின்றனர். அந்த ட்ரிப்பில் அவர்கள் ஒரு தனி வீட்டில் இருந்தபோது திடீரென அமானுஷ்ய சக்தியால் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகின்றனர். ஜாலியாக வந்த ட்ரிப் கொலைகளாக மாறி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை

யோகி பாபு, சுனைனா நண்பர்களாக நடித்திருக்கும் இந்த படம் த்ரில் மட்டும் சஸ்பென்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் சஸ்பென்ஸ் படமாக இருந்தாலும் ஆங்காங்கே யோகிபாபுவின் கலாய்க்கும் காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மொட்டை ராஜேந்திரனிடம், ‘நீயும் நானும் அழகான முகத்தை பற்றி பேசவே கூடாது’ என்று கூறுவதும் டீசரின் இறுதிக்காட்சியில் ’பேண்டுக்குள் இருப்பதை வெளியே எடுத்துவிடு என்று கருணாகரன் சொன்னதை கேட்டதும் ’சிம்பு மாதிரி பேசுறியே’ என்று சிம்புவை சம்பந்தம் இல்லாமல் கலாய்ப்பதும் இந்த டீசரின் ஹைலைட் காட்சிகளாக உள்ளது. இதற்கு சிம்பு ரசிகர்கள் எவ்வாறு ரியாக்ட் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web

Trending Videos

Tamilnadu News