×

நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள்…  வெற்றிமாறனை அவமானப்படுத்திய ஏர்போர்ட் அதிகாரி!

இந்தி பேச சொல்லி ஏர்போர்ட் வருபவர்களை அவமானப் படுத்தும் செயல் இப்போது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

 

இந்தி பேச சொல்லி ஏர்போர்ட் வருபவர்களை அவமானப் படுத்தும் செயல் இப்போது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள ஏர்போர்ட்களில் அதிகமாக வேலை செய்பவர்கள் வட இந்தியர்களாகவே உள்ளன. இவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியிலேயே பேசுவது மட்டுமல்லாமல் பயணிகளும் இந்தியிலேயே பேசவேண்டும் என சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். சமீபத்தில் எம் பி கனிமொழி இதுபற்றி பேசி விவாதத்தை உருவாக்கினார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் ‘நான் ஆடுகளம் படத்தின் சர்வதேச திரையிடல் ஒன்றுக்கு சென்றுவந்த போது டெல்லி ஏர்போட்டில் அதிகாரி ஒருவர் என்னிடம் இந்தியில் பேசினார். எனக்கு இந்தி தெரியாது என சொன்னேன். உனக்க்கு இந்த நாட்டின் தாய் மொழி தெரியாதா எனக் கேட்டார். நான் என் தாய் பேசும் மொழி தமிழ் பேசுவேன். மற்றவர்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் பேசுவேன் என சொன்னேன். நீங்களும் காஷ்மீரிகளும்தான் இந்த நாட்டை உடைக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள் என சொல்லி என்னை 45 நிமிடத்துக்கும் மேல் காக்க வைத்தார். அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினார்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News