×

த்தூ வெக்கமா இல்லை... பொம்பள பின்னாடி ஒளியுற! நித்தியை காரி துப்பிய சர்மா மனைவி! வீடியோ

தன்னுடைய இரு மகள்களான லோபமுத்ரா (21), நித்யநந்திதா (18) ஆகியோர் நாடு கடத்தப்பட்டதாக நித்தியானந்தாவுடைய முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 

அதே சமயம் பாலியல் புகாரில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நித்யானந்தாவை போலீசார் வலை வீசி இதுவரை தேடி வருகின்றனர். ஆனாலும் தன் மீதுள்ள வழக்குகளை குறித்து சிறிதுகூட கவலையில்லாமல் ஏதோ ஒரு தீவில் கைலாசாவை கட்டி முடித்துள்ளதாக அவர் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். 

நிதியானந்தாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜானர்த்தன் சர்மாவின் இரு மகள்களும் நித்தியானந்தாவை ஆதரித்தும் தங்களது பெற்றோர்களை குறித்து அவதூறு பரப்பியும் வருகின்றனர். 

நாங்கள் எங்களது விருப்பத்தின்படிதான் வெளிநாடுகளுக்கு சுற்றி வருகிறோம் என அவ்வப்போது முகநூலில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தன் சர்மாவின் மனைவி புவனேஸ்வரி சர்மா நித்யானந்தாவை கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், டேய் நித்யானந்தா நீ நிச்சயம் வேரறுக்கப்படுவாய் என ஆத்திரம் தீர திட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News