×

விபத்துக்கு நீங்களும் பொறுப்பு – கமலிடம் எதிர்கேள்வி கேட்ட லைகா !

இந்தியன் 2 விபத்து குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய கமலுக்கு லைகா சார்பாக நீண்ட விளக்கமும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

 

இந்தியன் 2 விபத்து குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய கமலுக்கு லைகா சார்பாக நீண்ட விளக்கமும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

கடந்த வாரம் இந்தியன் 2 படப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வுகளை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளது. இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டாலும் இனிமேல் விபத்துகள் நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனக் கேள்வி எழுந்துள்ளது.

விபத்து நடந்திருக்காவிட்டால் இந்நேரம் ஷங்கர், கமல் நடிக்கும் சில முக்கியக் காட்சிகளை லண்டனில் படமாக்கிக் கொண்டு இருந்திருப்பார். ஆனால் இப்போது தொழிலாளர்கள் உள்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என்ன விதமான பாதுகாப்பு மற்றும் காப்பீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என கமல் நீண்ட கடிதம் ஒன்றை லைகாவுக்கு அனுப்பியுள்ளார்.

இதற்கு லைகா சார்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் ‘ இந்தியன் 2 படப்பிடிப்பில் எங்களது நேரடி தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்துக்காக எங்கள் சார்பில் ஒரு நிர்வாக தயாரிப்பாளரும், இயக்குனர் ஷங்கர் சார்பில் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் எந்த சமரசமும் இன்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சொல்லிதான் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தனை வருட அனுபவம் உள்ள தாங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அதை உடனே கண்டுபிடித்திருப்பீர்கள். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தலையிட தங்களுக்கு எல்லா அதிகாரமும் உண்டு. எல்லா பாதுகாப்புகளை மீறி விபத்து நடந்துள்ளது. இதனை அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News