×

வீட்ல இருக்கற நீங்க இதை செய்யலாம் - அருண் விஜய் வெளியிட்ட செம வீடியோ

தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
 

வீட்டில் நேரத்தை செலவழிக்க தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் பிடிப்பது, சமையல் செய்வது என பலரும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், எல்லோரும் வீட்டில் இருங்கள். சில உடற்பயிற்சி செய்யுங்கள். 21 நாட்களுக்கு வெளியெ செல்லாதீர்கள். உங்களுக்கு பிடித்தமானவருக்காக இதை செய்யுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News