×

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது - இளம்பெண்ணை உயிரோடு எரித்த வாலிபர்

ஒரு தலைக்காதல் விவகாரத்தில் திருமணமான வாலிபர் ஒருவர் கல்லூரி பேராசிரியையை உயிரோடு எரித்துக் கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது - இளம்பெண்ணை உயிரோடு எரித்த வாலிபர்

மகாராஷ்டிரா  மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் அங்கிட்டா. இவர் நேற்று காலை வழக்கம்போல் பேருந்தில் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி வாசலில் அவர் பேருந்தில் இருந்து  இறங்கிய போது திடீரென ஒரு நபர் அவரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பைக்கில் தப்பிவிட்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகம், கை, கழுத்து என முழுவதும் கருகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 40 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த அங்கிட்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

போலீசாரின் விசாரணையில், அவர் மீது அவரை கொலை செய்தவர் அவரது வீட்டின் அருகே வசிக்கும் விக்கி(27) என்பது தெரிய வந்தது. கடந்த 3 மாதங்களாக அவர் அங்கிட்டாவை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். அங்கிட்டா அவரை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இத்தனைக்கும் விக்கி திருமனம் ஆனவர். அவருக்கு 7 மாத குழந்தை உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்துதான் அங்கிட்டா அவரை எச்சரித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அங்கிட்டாவை விக்கி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என அங்கிட்டாவின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News