Connect with us
GVP- Saindavi

Cinema News

உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?.. ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடியை வெளுத்து வாங்கிய பிரபலம்..

சமீபகாலமாக தமிழ்த்திரை உலகில் டைவர்ஸ் அதிகமாகி வருகின்றன. தனுஷ், ஐஸ்வர்யா, சமந்தா, அமலாபால் இப்படி இது ஒரு பேஷனாகி விட்டது. அந்த வகையில் தற்போது இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி மனமொத்துப் பிரிந்துவிட்டார்களாம். இந்த சொல்லே கொஞ்சம் வினோதமானது. மனமொத்து வாழத் தான் முடியும்.

எங்களது நிலைமை, தனிமனித சுதந்திரத்தை ஊடகங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று வேறு பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் நம்மைப் பார்க்கிறார்களே, இவர்கள் முன்னாடி நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற பொறுப்பு இல்லை. தனக்காக யாரும் வாழ்வதில்லை. முதலில் தனக்காக வாழ்கிறான். அப்புறம் மனைவி, குடும்பம் என வாழ்கிறான். தலைவர்கள் சமூகத்திற்காக வாழ்கிறார்கள்.

இதையும் படிங்க… தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளிய முதல் படம் இதுதான்!… அப்பவே இவ்வளவு தொகையா?..

இந்தப் பிரிவு இதோடு போவது இல்லை. இவர்களுக்கு இருக்கும் குழந்தை யாரு பக்கம் இருக்கும் என்பது கேள்விக்குறியாகிறது. அம்மா அல்லது அப்பா அல்லது தாத்தா என்று அதன் விருப்பம் தான். காட்டில் வாழும் மிருகங்கள் கூட தன் குட்டிக்காக வாழ்கிறது. ஆறறிவு படைத்த நமக்கு இல்லையே.

ஊரில் திருமணமானவர்கள் வெளிநாட்டில் கூலி வேலைக்குப் போகிறான். நமக்குக் குழந்தைப் பிறந்துள்ளதே அதற்காக வாழவேண்டுமே என உயிரைப் பணயம் வைத்துப் பல வேலைகளைச் செய்கிறான். ஆனால் சினிமாக்காரர்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதில்லை. எல்லா குடும்பத்திலும் பிரச்சனை உள்ளது. அதற்காக எல்லோரும் நீதிமன்றத்திற்குப் போகிறார்களா?

இதையும் படிங்க… ஹீரோக்களுக்கு முக்கியமான ஒன்னு.. அது விஜய்கிட்டதான் இருக்கு! இப்படி சொல்லிட்டாரே சத்யராஜ்

கணவன் மனைவியிடம் எத்தனை பேர் செஞ்ச தப்புக்கு மன்னிப்புக் கேட்டு வாழ்கிறான் தெரியுமா? அதே போல எத்தனை மனைவிகள் கணவனிடம் மன்னிப்பு கேட்டு வாழ்கிறார்கள் தெரியுமா? அப்படி ஒரு வாழ்க்கையை வாழாமல் என்ன உங்களுக்கு எல்லாம் மண்டையில 11 அறிவா இருக்கு?

மனமொத்துப் பிரிவதாக சொல்கிறீர்களே… உங்கள் குழந்தை பாவம். இதை எல்லாம் விட உங்களைப் ஃபாலோ பண்ணுகிறவர்கள் பெரும் பாவம். நம்ம தப்பு பண்ணினா பின்னாடி இருக்கறவனும் தப்பு பண்ணுவான்னு யோசிக்க வேண்டாமா? இனி வரும் காலங்களில் சினிமா உலகில் டைவர்ஸை கல்யாணத்து அன்றே அறிவிக்கலாம். அல்லது டைவர்ஸ்சுக்குப் பத்திரிகையே அடிச்சி அழைப்பு கொடுக்கலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top