×

நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் தலைவா! சச்சினுக்காக உருகும் முக்கிய பிரபலம்...
 

வெளிநாட்டு பிரபலங்களை எதிர்த்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் போட்ட பதிவுகள் சர்ச்சையை எதிர்கொண்டு வருகிறது. 
 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை, எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டரை மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால், எந்த பிரபலங்களும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா போட்ட ஒரே ட்வீட் மொத்த சூழ்நிலையையும் தலைகீழாக மாற்றியது. 

மியா கலிஃபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு குரல் கொடுக்க தொடங்கினர். ஆனால், அதை இந்திய இறையாண்மையை விடுத்த சவாலாக நம்மூர் பிரபலங்களில் சிலர் குரல் கொடுத்தனர். முதல் ஆளாக இப்படி ட்வீட் போட்டவர் கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தான். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த ட்வீட்டில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளியிலுள்ள சக்திகள், பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்பாளராக இருக்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியும். இந்தியாவுக்கான முடிவை இந்தியர்கள் எடுப்பார்கள். ஒரு நாடாக, நாம் இணைந்திருப்போம் எனத் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், சச்சினின் ட்வீட் குறித்து பாடலாசிரியர் விவேக் ஒரு ட்வீட் தட்டி இருக்கிறார். தவறு செய்து விட்டீர்கள் தலைவா. ஆனால், எனக்கு தெரியும் நீங்கள் தங்கமானவர். மக்களுக்காக என்றும் இருப்பீர்கள். மீண்டும் மக்களுடன் நிற்க வருவீர்கள் என நம்புகிறேன். ஒற்றை ட்வீட் உங்களை விவரித்து விட முடியாது. உங்களை வெறுக்கவும் முடியாது எனக் குறிப்பிட்டு இருந்தார். இதில் பாகுபலி படத்தையும் இணைத்து இருந்தார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News