×

சீன அதிபருக்கே எங்கள் கலாச்சாரத்தைதானே காட்டினீர்கள்…  கலாச்சாரக்குழுவில் தமிழர் இல்லையா? மோடிக்கு முதல்வர் கடிதம்!

இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் ஒரு தமிழர் கூட இல்லாமல் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ள்ளார்.

 

இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவில் ஒரு தமிழர் கூட இல்லாமல் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ள்ளார்.

முதல்வரின் கடிதம்

கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 16 போ கொண்ட நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்முயற்சிக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில், மிகப் பழமையான திராவிடா் கலாச்சாரத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்த நிபுணா் குழுவில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானதாகும். தற்போது கீழடியிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகளின்படி பார்த்தால், சங்க காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தோன்றியது எனத் தெரியவருகிறது. இதன் மூலம், உலகின் மிகப் பழமையான, தற்போதும் உள்ள கலாச்சாரமாகவும் மொழியாகவும் தமிழைச் சொல்ல முடியும்.

கடந்த ஆண்டு நீங்கள் மாமல்லபுரம் வந்து, தமிழக பாரம்பரியத்தை நேரில் கண்டு வியந்தீர்கள். இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழக கலாச்சாரம் மற்றும் மொழிக்கு இடமளிக்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன். தற்போது, இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்கள் யாரும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்திய கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மறுசீரமைப்பு செய்து, அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News