Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உன் மரண ரகசியத்தை உன்னுடனே எடுத்துச்சென்றாய் – நடிகை பூமிகா

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

79684f356318ed11fa87599d8dd059f1

இந்நிலையில் சுஷாந்துடன் தோனி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்த பூமிகா “சுஷாந்த்… நீ எங்கு இருந்தாலும் கடவுளின் கையில் இருப்பாய். உன்னை எது எடுத்துச் சென்றதோ? அந்த ரகசியம் உன்னுடனே சென்று விட்டது. ஏன் உனக்கு இப்படி நடந்தது என்று பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன..

மேலும், சுஷாந்தின் மரணம் குறித்து இஷ்டத்துக்கு பேசிவருபவர்களுக்கு, “ஒரு உயிருக்கு மரியாதை கொடுங்கள். மனிதர்களை மதிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். மனிதர்களை குறை சொல்லாதீர்கள். ஒவ்வொருவரையும் மதியுங்கள். சுஷாந்துக்காக பிராத்த்னைகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top