×

கொடூர கார் விபத்தில் இளம் நடிகர் மரணம்... நடிகர்களை தொடர்ந்து காவு வாங்கும் சினிமா?

சமீபகாலமாகவே இந்திய சினிமாவிற்கு போதாத காலமாக இருக்கின்றது. தமிழில் நடிகர் சேதுராமன், இயக்குனர் விசு, பரவை முனியம்மா போன்றவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

 

இந்நிலையில் பாலிவுட்டில் இர்பான் கானை தொடர்ந்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் கடந்த வாரத்தில் மரணமடைந்தார். இப்படி அடுத்தடுத்த மரண செய்திகள் ரசிகர்களை தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இளம் மலையாள நடிகர் பேசில் ஜார்ஜ் தற்போது மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி மலையாள சினிமா ரசிகர்களை உலுகியுள்ளது. அவர் தனது சகோதரர்களுடன் காரில் பயணித்த போது கொடூர கார் விபத்தினால் மரணம் அடைந்துள்ளார். அதில் அவருடன் பயணித்த 5 பேரில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு கேரளா மூவட்டப்புழா அருகே  பயணித்த போது காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.

எனவே கார் அருகில் இருந்த கடை மற்றும் குடியிருப்பின் மீது மோதியது. அந்த குடியிருப்பில் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி வந்தனர். இந்த நிலையில் வாசலில் அமர்ந்திருந்த இருவர் மீது கார் மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News