×

இளம் நடிகர் எடுத்த அதிரடி முடிவு!... ஷாக்கான திரையுலகம்...

நடிகர் ஹரிஷ் கல்யாண் கொரோனா வைரஸ் நிவாரணமாக புதிய முடிவை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஹரிஷ் கல்யாண். 

 

இவர் நடித்த பியார் ப்ரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு ஆன்லைன் ப்ளாட்ஃபார்மில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஊரடங்கு போடப்பட்டு 50 நாட்களை நெருங்கி வருகிறது. இதனால் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக'' அவர் தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News