Categories: Cinema News Gossips latest news

பட புரமோஷனுக்காக தன்னைப்பற்றி தானே வதந்தி பரப்பிய வாரிசு நடிகர்….எல்லாம் சொதப்பலில் முடிந்த சோகம்….!

தனது தாத்தா தந்தை ஆகிய இருவரும் கோலிவுட்டில் தலைசிறந்த நடிகர்கள் என்ற அந்தஸ்தோடு கோலிவுட்டில் மூன்றாவது தலைமுறை நடிகராக களமிறங்கியவர் தான் அந்த வாரிசு நடிகர். ஆனால் அவரது தாத்தா மற்றும் அப்பாவின் பெயர் புகழில் பாதியை கூட வாரிசு நடிகரால் பெற முடியவில்லை.

இரண்டு தலைமுறையாக திரையுலகிலும் சரி சமுதாயத்திலும் சரி நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்த நிலையில் வாரிசு நடிகர் தொடர்ந்து அடல்ட் படங்களில் நடித்து அவரது கெரியரை கெடுத்து கொண்டது மட்டுமின்றி அவரின் குடும்ப மானத்தையும் சேர்த்து வாங்கி விட்டார். இதனால் வாரிசு நடிகரின் தந்தை உச்சக்கட்ட கடுப்பில் இருந்து வருகிறாராம்.

இந்நிலையில் வாரிசு நடிகரின் நடிப்பில் சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு படம் வெளியான தடயமே இல்லாமல் அட்டு பிளாப் ஆனது. இதனால் அந்த படத்தை எப்படியாவது புரமோட் செய்ய வேண்டும் என்று நினைத்த வாரிசு நடிகர் தன்னுடன் இணைந்து நடித்த பப்ளிமாஸ் நடிகையுடன் காதல் திருமணம் என தன்னைப்பற்றி தானே வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்.

ஆனால் நடிகர் எதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாரோ அது நடக்காமல் போய்விட்டதாம். இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என யோசித்து வரும் நடிகருக்கு ஏதாவது பெரிய நடிகருடன் சேர்ந்து நடித்தால் மட்டும் தான் ஓரளவிற்கு சினிமாவில் நீடிக்க முடியும் என நெருங்கிய நண்பர்கள் சிலர் அறிவுரை கூறி வருகிறார்களாம்.

அதன்படி தற்போது விரல் நடிகருடன் இணைந்து நடித்து வரும் அந்த படம் மட்டுமே வாரிசு நடிகருக்கு ஒரே ஒரு நம்பிக்கையாக உள்ளது. ஆனால், அந்த படமும் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் வந்தால் தான் வெற்றி பெற முடியுமாம்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்