×

இளம் நடிகை தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

மன அழுத்தம் காரணமாக பெங்காலி நடிகை சுபர்ணா ஜாஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவரின் குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

சுபர்னா ஜாஷ் வங்க மாநிலம் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர். மேல் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு வந்த அவருக்கு ஆர்வம் எல்லாம் சினிமாவின் மீது இருந்தது. எனவே, வாய்ப்புகள் தேடி அலைந்தார். சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான  ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதனால், அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இதைத் தொடர்ந்து தனது அறையில் உள்ள மின் விசிறியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

கடந்த சில நாட்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News